< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது - சித்தராமையா
நாடாளுமன்ற தேர்தல்-2024

'மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது' - சித்தராமையா

தினத்தந்தி
|
6 May 2024 3:59 AM IST

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துகொண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி உறுதியாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்திருப்பதை பா.ஜ.க.வினரே உணர்ந்து கொண்டதாகவும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமயா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"கர்நாடக மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பா.ஜ.க.வின் 25 எம்.பி.க்கள் எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. தங்கள் கட்சியின் எம்.பி.க்களை பா.ஜ.க. கைவிட்டுவிட்டது. காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அரசு. ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.

மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துகொண்டுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிப்போம் என்று கூறினோம்.

ஆனால் நாங்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவோம் என்று கூறியதாக பிரதமர் மோடி மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார். இந்த அளவிற்கு பொய்களை கூறும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததில்லை."

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்