திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி
|நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
சென்னை,
தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது . தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். துரை வைகோ போட்டியிட ம.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கூறியதாவது:-
ம.தி.மு.க. வேட்பாளராக திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறினார்.
திருச்சி தொகுதி கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.