< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
தி.மு.க. வேட்பாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி
|21 March 2024 2:21 PM IST
வேலூரில் இன்று துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வேலூர்,
வேலூரில் இன்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கூறியதாவது,
பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள். மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். தி.மு.க.-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.