< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா

தினத்தந்தி
|
7 April 2024 12:09 PM IST

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.

சிதம்பரம்,

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது. செங்கோல் விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ், தி.மு.க. எதிர்த்தது.

தமிழர்களின் பண்பாடு, சனாதானத்தை பா.ஜ.க. தான் காத்துவருகிறது. மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்