< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தி.மு.க. ஆட்சியில் கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை தாக்கு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தி.மு.க. ஆட்சியில் கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை தாக்கு

தினத்தந்தி
|
4 April 2024 1:49 PM IST

கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய மரியாதை தருகிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரிய கட்சிகள் பா.ஜ.க. தலைமையை ஏற்று கூட்டணியில் இணைந்துள்ளன. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய மரியாதை தருகிறோம். இந்தியா இதுவரை பார்க்காத அரசை கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஈரோட்டிற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் குண்டுவெடிப்பு, கலவரம் போன்றவை இல்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் கொடுக்காத மரியாதையை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம்.சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை நோக்கி சரியாக செல்லும்.இன்று சைக்கிள் சின்னம் ஒரு ஆமை தான். முயல், ஆமை கதையின் இறுதியில் ஆமை தான் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்