< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தல்-2024

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
20 March 2024 12:52 PM IST

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. இன்று தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள், முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் பிரசாரம், தேர்தல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்