< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

தினத்தந்தி
|
18 March 2024 6:48 PM IST

கொ.ம.தே.க.வின் பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்பட்டு உள்ளது

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. இதன்படி, நாமக்கல் தொகுதியானது கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (கொ.ம.தே.க.) ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரிய மூர்த்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். அவர், கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்