< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
டெல்லி: மத்திய மந்திரி ஹர்ஷ்தீப்சிங் பூரி ஆட்டோவில் பயணம்
|2 May 2024 8:41 PM IST
மத்திய மந்திரி ஹர்ஷ்தீப்சிங் பூரி டெல்லியில் ஆட்டோ பயணம் மேற்கொண்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய மந்திரி ஹர்ஷ்தீப்சிங் பூரி இன்று டெல்லியில் ஆட்டோ பயணம் மேற்கொண்டார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "மேடையின்றி, பொதுக்கூட்டமின்றி டெல்லியில் எளிமையாக ஒரு ஆட்டோ பயணம் மேற்கொண்டேன். ஆட்டோ டிரைவர் பங்கஜ், பிரதமரின் உஜ்வாலா திட்டம், ஆவாஸ் யோஜனா திட்டம், கிசான் சம்மான் நிதி திட்டம் ஆகியவற்றால் பலனடைவதாக தெரிவித்தார். கடும் வெயிலிலும், பிரதமர் மோடி மீது அவர் வெளிப்படுத்திய அன்பு, என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த பயணத்தை என்னால் மறக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.