< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் அறிக்கையில் சொத்துகளை பகிர்ந்து அளிப்பதாக எங்கே சொல்லி இருக்கிறோம்.. ? - ராஜ்நாத்சிங்குக்கு ப.சிதம்பரம் கேள்வி
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் அறிக்கையில் சொத்துகளை பகிர்ந்து அளிப்பதாக எங்கே சொல்லி இருக்கிறோம்.. ? - ராஜ்நாத்சிங்குக்கு ப.சிதம்பரம் கேள்வி

தினத்தந்தி
|
25 April 2024 4:35 AM IST

அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்புத்துறை மந்திரி தனது கண்ணியத்தை குறைக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ''பொதுமக்களின் சொத்துகளை பறித்து, ஊடுருவல்காரர்களுக்கு பிரித்து கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'' என்று அவர் சொல்கிறார்.

தேர்தல் அறிக்கையில் அப்படி எங்கே சொல்லி இருக்கிறோம்? எந்த பக்கத்தில் அந்த கருத்தை படித்தீர்கள் என்று ராஜ்நாத்சிங்கை கேட்க விரும்புகிறேன். ஒருவேளை, கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய எதையாவது அவர் படித்தாரா?

அப்பட்டமான பொய்களை பேசி, ராணுவ மந்திரி தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்