கடலூர் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி
|கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
கடலூர்,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இதன்படி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் 4,55,053 வாக்குகள் பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்து தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து 2,69,157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் 2,05,244 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திலும் உள்ளனர்.