< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
|8 April 2024 1:35 AM IST
மேற்கு வங்காளத்தில் பங்கான், உலுபெரியா, காடல் ஆகிய தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.
பங்கான் தொகுதிக்கு பிரதிப் பிஸ்வாஸ், உலுபெரியா தொகுதிக்கு அசாஹர் மொல்லிக், காடல் தொகுதிக்கு பபியா சக்ரவர்த்தி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன், 13 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது.
முர்ஷிதாபாத் மாவட்டம் பாகபன்கோலா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு அஞ்சு பேகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.