< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல்-2024

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

தினத்தந்தி
|
27 April 2024 3:44 PM IST

மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது. இதில் உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

கடந்த தேர்தலில் உ.பி-யின் அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே வென்றார். அமேதியில் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இம்முறை ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி இதுவரை 317 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க 2 தொகுதிகளின் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்