< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

தினத்தந்தி
|
3 Jun 2024 9:04 PM IST

இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அதேவேளையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், தேர்தல் முடிவுகளில் குளறுபடி இருந்தால் ஜனாதிபதியை சந்தித்து புகார் அளிக்கவும் காங்கிரஸ் திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்