< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை
நாடாளுமன்ற தேர்தல்-2024

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை

தினத்தந்தி
|
4 Jun 2024 5:49 AM GMT

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் 39,199 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 23,512 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதிமுக (பசிலியான் நசரேத்) - 3,139

நாதக (மரிய ஜெனிபர்) - 3,567

மேலும் செய்திகள்