< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
40 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தல்-2024

40 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்

தினத்தந்தி
|
6 Jun 2024 2:03 AM IST

1984-ல் காங்கிரஸ் சார்பில் அமிதாப்பச்சன் வெற்றி பெற்ற பின்பு, தற்போது காங்கிரஸ் அலகாபாத் தொகுதியை கைப்பற்றி உள்ளது.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உஜ்வல் ராமன்சிங் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நீரஜ் திரிபாதியை 58 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்து உள்ளார். ராமன்சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்றார். திரிபாதி 4 லட்சத்து 3 ஆயிரத்து 350 வாக்குகள் பெற்றார்.

1984-ல் காங்கிரஸ் சார்பில் அமிதாப்பச்சன் வெற்றி பெற்ற பின்பு, இந்த தொகுதியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியிட்டும், காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காங்கிரஸ் அலகாபாத் தொகுதியை கைப்பற்றி உள்ளது. 2014, 2019 தேர்தல்களில் பாஜனதா வசமிருந்த அலகாபாத் தற்போது காங்கிரஸ் கைக்குமாறியுள்ளது.

1984-க்கு முன்பு இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி 1957, 1962-ல் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்