< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் யார்? - வெளியான அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் யார்? - வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
26 March 2024 9:02 PM IST

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறைக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் ஆர்.சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மேலும் செய்திகள்