< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Shashi Tharoor
நாடாளுமன்ற தேர்தல்-2024

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி

தினத்தந்தி
|
4 Jun 2024 2:01 PM IST

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் முன்னிலை பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேரளா திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராஜீவ் சந்திரசேகர் களமிறக்கப்பட்டார்.

தற்போதைய நிலவரப்படி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 3 லட்சத்து 8 ஆயிரத்து 640 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 3 லட்சத்து 3 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேலும் செய்திகள்