< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
17 April 2024 4:16 PM IST

2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, 14 தொகுதிகளை கொண்ட அசாமில் 3 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 26ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், 2019ம் ஆண்டு நம்பிக்கையுடன் வந்தேன். தற்போது வெற்றிபெறுவோம் உறுதியுடன் வந்துள்ளேன்.

கடவுள் ராமரின் பிறந்தநாள் விழா சூரிய திலக நிகழ்ச்சியுடன் 500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி கோவிலில் கொண்டாடப்பட்டுள்ளது. அயோத்தில் நடைபெற்ற விழாவில் நாம் பங்கேற்கமுடியவில்லை. ஆனால், தற்போது நமது செல்போனில் உள்ள டார்ச் லைட் விளக்கை ஆன் செய்து விழாவில் நாம் பங்கேற்கேற்போம்.

எந்தவித பாகுபாடுமின்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஆயிஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்