< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
15 May 2024 6:20 PM IST

தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

ராஞ்சி,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, பிரதமர் மோடி வாக்காளர்களை மதரீதியாக பிரித்து விட்டார். ஆனால், இந்து-முஸ்லிம் அரசியலை ஒருபோதும் செய்யவில்லை என தற்போது பொய் கூறி வருகிறார் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியேற கூடிய பிரதமராக உள்ளார். தொடக்க நிலையிலான தேர்தல் முடிவுகளே அவருடைய நம்பிக்கையின்மையை காட்டுகின்றன. அமித்ஷாவும் வெளியேற கூடிய உள்துறை மந்திரியாக உள்ளார். ஜூன் 4-ந்தேதிக்கு பின்னர், பொய்களின் பெருந்தொற்றுகளில் இருந்து நாம் வெளிவருவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மோடியின் உத்தரவாதம், இடிந்து விழுந்த ஒரு பிளாட் என கூறிய அவர், வளர்ச்சிக்கான பாரதம் பற்றிய பேச்சே இல்லை. இந்து மற்றும் முஸ்லிம் ஆகியோரை சுற்றியே பா.ஜ.க.வின் பிரசாரம் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியானது, மத்தியில் அடுத்த அரசை அமைக்கும் என கூறிய ரமேஷ், அப்போது நாடு முழுவதிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்