< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ஜ.க.,வின் புதிய பிரசார பாடல் வெளியீடு
|10 April 2024 2:41 PM IST
பா.ஜ.க.,வின் புதிய பிரசார பாடல் 12 மொழிகளில் பாடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க. தனது புதிய பிரசார பாடலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி ராமர் கோவில், வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட பா.ஜனதா அரசின் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் 12 இந்திய மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்து பா.ஜ.க. எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பலதரப்பட்ட பின்னணியில் உள்ளவர்கள் எல்லா மொழிகளிலும் பேசுபவர்கள் ஒருமித்த குரலில் ஒன்றை சொல்கிறார்கள்.
2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை மோடி எப்படி நிறைவேற்றினார் என்பதை இந்த பாடல் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.