< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
நாடாளுமன்ற தேர்தல்-2024

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
4 April 2024 5:37 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பா.ஜ.க. அரசு மீட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

2019-ம் ஆண்டில், நான் இதே மைதானத்திற்கு ஒரு பேரணியில் உரையாற்ற வந்தேன். அப்போது என்னை பேச விடாமல் தடுத்தனர். இதற்கு பொதுமக்கள் பதில் அளிப்பார்கள் என்று அப்போது கூறியிருந்தேன். இன்று எந்த தடையையும் ஏற்படுத்தாத வங்காள அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பா.ஜ.க. அரசு மீட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதிப்பதில்லை. நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் பல திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும். சந்தேஷ்காளி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு எவ்வளவு முயற்சி செய்தது என்பதை நாடு பார்த்திருக்கிறது. சந்தேஷ்காளி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழிக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்