< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மகத்தான வெற்றிக்கு தயாரான அமித்ஷா : 6 லட்சம் வாக்குகள் முன்னிலை
நாடாளுமன்ற தேர்தல்-2024

மகத்தான வெற்றிக்கு தயாரான அமித்ஷா : 6 லட்சம் வாக்குகள் முன்னிலை

தினத்தந்தி
|
4 Jun 2024 2:40 PM IST

குஜராத் காந்திநகர் தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அமித் ஷா முன்னிலையில் உள்ளார்

காந்தி நகர்,

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தற்போது 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் எல்.கே.அத்வானி, வாஜ்பாய் வெற்றிபெற்ற தொகுதியான குஜராத் காந்தி நகரில் பா.ஜனதா சார்பில் களமிறங்கியுள்ள அமித்ஷா, 8 லட்சத்து 36 ஆயிரத்து 657 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதன்படி 6.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அமித்ஷா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனல் படேல் 2,00,192 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்