< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024

திருச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
31 March 2024 9:26 AM IST

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் திருச்சி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட சுமார் 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்