தமிழகத்தில் பா.ஜனதா மலராது; இது திராவிட பூமி - அமைச்சர் ரகுபதி பேட்டி
|தமிழிசை சவுந்தரராஜன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். இந்தியா கூட்டணி களத்தில் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு கவர்னர் பீகாரில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வருகிறது. சி.ஏ.ஏ. சட்டத்தை அ.தி.மு.க.வினர் ஆதரித்து விட்டு, இன்று நாடகமாடுகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் டெபாசிட்டிற்காக போராட வேண்டியது இருக்கும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை விமர்சித்ததில் பா.ஜனதா கூட்டணியினருக்கு மக்கள் ஒரு ஓட்டுக்கூட போட மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மலராது. இது திராவிட பூமி.
பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி என்ற நிலை தற்போது இல்லை. பா.ஜனதாவுக்கு தமிழகத்திற்கு களம் இல்லை. கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க.வின் நிலை பரிதாபமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.