< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. முன்னிலை
நாடாளுமன்ற தேர்தல்-2024

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. முன்னிலை

தினத்தந்தி
|
4 Jun 2024 1:04 PM IST

ஹமிர்பூர் தொகுதியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் 4 லட்சத்து 82 ஆயிரத்து 517 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சிம்லா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.

கங்கரா தொகுதி:-

பா.ஜ.க. வேட்பாளர் ராஜீவ் பரத்வாஜ் - 5,58,946 வாக்குகள் பெற்று முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சர்மா - 3,36,968 வாக்குகள் பெற்று பின்னடைவு

மண்டி தொகுதி:-

பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் - 4,40,217 வாக்குகள் பெற்று முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங் - 3,78,653 வாக்குகள் பெற்று பின்னடைவு

ஹமிர்பூர் தொகுதி:-

பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் சிங் தாக்கூர் - 4,82,517 வாக்குகள் பெற்று முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் சட்பால் ரைசாடா - 3,36,760 வாக்குகள் பெற்று பின்னடைவு

சிம்லா தொகுதி:-

பா.ஜ.க. வேட்பாளர் சுரேஷ் குமார் காஷ்யப் - 4,64,432 வாக்குகள் பெற்று முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் வினோத் சுல்தான்புரி - 3,84,851 வாக்குகள் பெற்று பின்னடைவு

மேலும் செய்திகள்