< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை -  செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல்-2024

10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 April 2024 4:34 PM IST

இந்தியா கூட்டணி வென்றால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

நெல்லை,

'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை நெல்லை வந்தடைந்தார். நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:- 10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணி வென்றால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். சென்னதை மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் தி.மு.க. நிறைவேற்றியுள்ளது என்றார்,

மேலும் செய்திகள்