< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
மசூதியின் மீது அம்பு எய்வது போல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா பின்னடைவு
|4 Jun 2024 4:41 PM IST
மசூதியின் மீது அம்பு எய்வது போல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கிய ஐதராபாத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மாதவி லதா போட்டியிட்டார். இவர் தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியை நோக்கி அம்பு எய்வது போல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கினார். மேலும் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் அட்டைகளை கேட்டும், அவர்களின் முகத்தை காட்டச் சொல்லியும் மாதவி லதா கட்டாயப்படுத்தினார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஐதராபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதை நிலவரப்படி அந்த தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.