< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நீலகிரியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு
|4 Jun 2024 10:24 AM IST
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் 13,902 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 28,751 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக (லோகேஷ் தமிழ்செல்வன்) - 10,655
நாதக (ஆ.ஜெயக்குமார்) - 1,286