அசாம்: கவுகாத்தியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்
|கவுகாத்தியில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரி சுமித் சத்வான் தெரிவித்தார்.
திஸ்பூர்,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் கவுகாத்தி மக்களவை தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுகாத்தி அதிகாரி சுமித் சத்வான், "கவுகாத்தி தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அவற்றில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த வாக்குச் சாவடிகளில் அனைத்து பணியாளர்களும் பெண்களாக இருப்பார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.