< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
அசாம்: 5 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு - தேர்தல் பிரசாரம் நிறைவு
|17 April 2024 9:26 PM IST
அசாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 5 தொகுதிகளில் இன்றோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு வரும் 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மீதம் உள்ள 5 தொகுதிகளுக்கு வரும் 26-ந்தேதியும், 4 தொகுதிகளுக்கு மே 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஜோர்ஹாட், திப்ருகார், கசிரங்கா, லக்கிம்பூர் மற்றும் சோனித்பூர் ஆகிய 5 மக்களவை தொகுதிகளில் இன்றோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 36 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.