< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

தினத்தந்தி
|
8 April 2024 11:42 PM IST

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அந்தவகையில் 16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்கள் மற்றும் தொகுதி வாரியாக விவரங்கள் பின்வருமாறு:-

* ஆர்.கே.நகர் - எஸ்.வாசுகி, இணை இயக்குனர், ஆதி திராவிட நலத்துறை. செல்போன் எண் - 73388 01243.

* பெரம்பூர் - அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்போன் எண் - 94450 00901.

* கொளத்தூர் - வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை. செல்போன் எண் - 90951 54565.

* திரு.வி.க.நகர் - மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம். செல்போன் எண் - 80155 02885.

* ராயபுரம் - எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ. செல்போன் எண் - 94450 06554.

* வில்லிவாக்கம் - எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம். செல்போன் எண் - 96778 51335.

* எழும்பூர் - குழந்தைசாமி, செட்டில்மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட். செல்போன் எண் - 99449 14120.

* துறைமுகம் - பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குனர், ஊரக சுகாதார மருத்துவ சேவை. செல்போன் எண் - 73581 44619.

* சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி - வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன். செல்போன் எண் - 94865 91402.

* ஆயிரம் விளக்கு - என். ராகவேந்திரன், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம். செல்போன் எண் - 90477 99947.

* அண்ணாநகர் - செந்தில் குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம். செல்போன் எண் - 82704 89470.

* விருகம்பாக்கம் - ஆர். பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக். செல்போன் எண் - 96293 28933.

* சைதாப்பேட்டை - துர்காதேவி, செயலாளர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். செல்போன் எண் - 9445074956.

* தியாகராயநகர் - சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி. செல்போன் எண் - 94451 90740.

* மயிலாப்பூர் - விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்போன் எண் - 70100 34495.

* வேளச்சேரி - கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். செல்போன் எண் - 99629 55626.

இந்த உதவி தேர்தல் அதிகாரிகள் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டு பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்