< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டி

தினத்தந்தி
|
25 March 2024 10:38 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

மேலும் செய்திகள்