'தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்துவிட்டு வாரிசு அரசியல் பற்றி அண்ணாமலை பேசுகிறார்' - செல்வப்பெருந்தகை
|சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்துவிட்டு, கோவையில் வாரிசு அரசியல் பற்றி அண்ணாமலை பேசுகிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
சென்னை,
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"தென்சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மிகப்பெரிய தலைவரான குமரி அனந்தனின் மகள் என்று பேசியிருக்கிறார். இங்கே இப்படி பேசிவிட்டு, கோவைக்குச் சென்று வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். எங்கு பார்த்தாலும் வாரிசுகளாக நிற்கிறார்கள் என்கிறார்.
இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான முகம். தமிழிசை சவுந்தரராஜன் குறித்து தெலுங்கானா மக்களிடமும், புதுச்சேரி மக்களிடமும் கேட்டால் சொல்வார்கள். ஒரு மாநில கவர்னரை முதல்-மந்திரி வரவேற்கப் போகாமல் மறுப்பு தெரிவித்த சம்பவம் முதலில் நடந்தது தெலுங்கானாவில்தான்."
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.