< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

தினத்தந்தி
|
26 March 2024 1:06 PM GMT

அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது என்று சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது. தவறான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும். 39 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நான் உட்பட என்னுடன் இருக்கும் 10 பேர் அரசியலை விட்டு விலகுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்