கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை
|வடமாநில மக்களிடம் இந்தியில் பேசி அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.
அவருடன் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடனிருந்தார். இந்நிலையில் தெப்பகுளம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, அங்குள்ள வடமாநில மக்களிடம் அவர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் பேசி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.