< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529 கோடி
|23 April 2024 4:46 AM IST
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அமராவதி,
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவரது சொத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தன. அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.529 கோடி சொத்து வைத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதிக்கு ரூ.176.30 கோடி சொத்துகள் உள்ளன. மேலும் 6.4 கிலோ தங்க, வைர நகைகளையும் அவர் வைத்துள்ளார். இதன் சந்தை மதிப்பு ரூ.5.30 கோடி ஆகும்.