< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற அமித்ஷா
|4 Jun 2024 6:32 PM IST
குஜராத் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை மந்திரி அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பதிவு செய்தார்.
காந்தி நகர்,
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.
இதில் எல்.கே.அத்வானி, வாஜ்பாய் வெற்றிபெற்ற தொகுதியான குஜராத் காந்தி நகரில் பா.ஜனதா சார்பில் களமிறங்கிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 10 லட்சத்து 10 ஆயிரத்து 972 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அமித்ஷா அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சோனல் படேல் 2,66,256 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.