< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
அதிகாரிகள் துணையுடன் 25 ஆண்டுகளாக ஊழல் அரசு நடத்துகிறார், நவீன் பட்நாயக் - அமித்ஷா தாக்கு
|26 April 2024 4:00 AM IST
இரட்டை என்ஜின் மாநிலங்கள்போல், ஒடிசாவை வளர்ச்சி அடைய செய்வதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதையொட்டி, சோனிபூரில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு 25 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். பா.ஜனதாவுக்கு 5 ஆண்டு வாய்ப்பு தாருங்கள். இரட்டை என்ஜின் மாநிலங்கள்போல், ஒடிசாவை வளர்ச்சி அடைய செய்கிறோம்.
கனிம வளம், நீர்வளம் இருந்தபோதிலும், நவீன் பட்நாயக் ஆட்சியில் ஒடிசா வளர்ச்சி அடையவில்லை. அதிகாரிகள் துணையுடன் அவர் 25 ஆண்டுகளாக ஊழல் அரசு நடத்தி வருகிறார்" என்று அமித்ஷா பேசினார்.