< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா

தினத்தந்தி
|
28 March 2024 2:59 PM IST

மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏப்.4-ம் தேதி தமிழகம் வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பலகட்ட பணிகளை பக்குவமாக முடித்த தலைவர்கள், தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். ஏப்.4ல் மதுரை, சிவகங்கை தொகுதியிலும், ஏப்.5-ல் சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்