< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மாபெரும் ஜனநாயக திருவிழாவில் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் - உத்தரகாண்ட் முதல்-மந்திரி வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'மாபெரும் ஜனநாயக திருவிழாவில் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்' - உத்தரகாண்ட் முதல்-மந்திரி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
17 April 2024 6:45 PM IST

ஒவ்வொரு வாக்கும் நாட்டின் பாதை மற்றும் நிலையை மாற்றி வரலாறு படைக்கும் என புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

டேராடூன்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு இன்றோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் அங்குள்ள 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. இந்த முறையும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் வரலாற்று வெற்றி பதிவு செய்யப்படும். நம் நாட்டில் நடைபெறவுள்ள மாபெரும் ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நாட்டின் பாதை மற்றும் நிலையை மாற்றி வரலாறு படைக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்