< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
வாக்கு எண்ணிக்கைக்கு முன்... பத்திரிகையாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று மதியம் சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

வாக்கு எண்ணிக்கைக்கு முன்... பத்திரிகையாளர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று மதியம் சந்திப்பு

தினத்தந்தி
|
3 Jun 2024 8:35 AM IST

நாட்டின் தேர்தல் வரலாற்றில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையம் இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இதன்படி, இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களுடனான இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. நாட்டின் தேர்தல் வரலாற்றில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவருடைய சமூக ஊடக தளத்தின் வழியே நேற்று வெளியிட்ட செய்தியொன்றில், ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன், 150 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே பேசினார் என தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுபற்றி நேற்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி, அவரிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதுபற்றிய உண்மையான தகவல் மற்றும் விவரங்களையும் கேட்டிருந்தது. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்