< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழகத்தில் அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது - எல்.முருகன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'தமிழகத்தில் அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது' - எல்.முருகன்

தினத்தந்தி
|
29 March 2024 9:12 AM IST

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது என நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்தார்.

நீலகிரி,

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள எல்.முருகன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே உதகையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சமூக நீதியின் உண்மையான கதாநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான். தமிழகத்தில் பா.ஜ.க. பிரதான கட்சியாக வளர்ந்துள்ளது. நீலகிரியில் அ.தி.மு.க. எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்திலேயே இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் 39 வேட்பாளர்களும் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்