< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல்  பாதுகாப்புக்கு கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம்:  சத்யபிரதா சாகு தகவல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம்: சத்யபிரதா சாகு தகவல்

தினத்தந்தி
|
15 April 2024 6:13 AM IST

தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. என்று சத்யபிரதா சாகு தெரிவித்தாா்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதா சாகு கூறியதாவது,

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

தபால் வாக்குகள்: தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீஸாா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது.

பூத் ஸ்லிப்கள்: வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்குப் பதிவுக்காக எடுத்துச் செல்லப்படும். வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வருமான வரித்துறையினரின் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. என்று தெரிவித்தாா்.

மேலும் செய்திகள்