< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
|17 April 2024 1:09 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுப் பெறுகிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா வியாசர்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். நடிகை நமிதாவுடன் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பெண்கள் பங்கேற்றனர்.