< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு

தினத்தந்தி
|
17 April 2024 3:28 PM IST

கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை,

தமிழகத்தில் வரும் 19-ந்தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு நடிகர், நடிகைகளும் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் இன்று பிரசாரம் மேற்கொண்டார். கோவை சூளூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பேசிய அவர், "இன்றோடு பிரசாரம் நிறைவடையலாம். வாக்குப்பதிவு 19-ந்தேதியோடு முடியலாம்.

ஆனால் நம்முடைய எதிர்காலம், அடுத்த 5 ஆண்டுகளை பார்த்துக் கொள்ளப்போவது அ.தி.மு.க.தான். கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, அதன் பலனை மக்கள் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.



மேலும் செய்திகள்