தள்ளாடும் வயதிலும் தவறாமல் ஜனநாயக கடமையாற்றிய 94 வயது மூதாட்டி
|13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மணிப்பூரில் உள்ள ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் 94 வயது மூதாட்டி ஒருவர் தவறாமல் தனது வாக்கைச் செலுத்தினார். தள்ளாடும் வயதிலும் அந்த மூதாட்டி காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.