< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது
நாடாளுமன்ற தேர்தல்-2024

புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

தினத்தந்தி
|
20 April 2024 12:07 AM IST

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

புதுவை,

தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருந்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுது. இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது இரவு 9 மணிக்கு மேல் நிறைவுற்ற நிலையில் 78.72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்