< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு  பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது -  சத்யபிரதா சாகு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு

தினத்தந்தி
|
12 April 2024 2:24 PM IST

தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும்.தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்