< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
12 May 2024 4:53 AM IST

அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவானது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற 3-ம் கட்ட தேர்தல் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்தது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆண் வாக்காளர்கள் 66.89 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதமும், 3-ம் பாலினத்தவர்கள் 25.2 சதவீதமும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதல் 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் முறையே, 66.14 சதவீதம் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும் முதல் கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இதேபோல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் வாக்கு சதவிகிதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்