< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 208 வழக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு தகவல்
|21 March 2024 10:23 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில், இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.